கேரள மக்களுக்கு ஒரு பிரச்சனைனா.. தமிழ்நாடு வந்து நிற்கும்.. ஓணம் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்ட தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. நூற்றுக்கணககானோர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படாது என்று கேரள அரசு அறிவித்திருந்து. ஓணம் பண்டிகையன்று நடத்தப்படும் முக்கியப் போன படகும் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓணம் கொண்டாட்டத்தை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட உடன் பிறப்புகளான கேரள மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்ட தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும் என்று கூறி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை (15-9-2024) கொண்டாடப்படுகிறது.
அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது. நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.
திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.
சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications