முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்
சென்னை: முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை, சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உடல் நலனில் எப்போதுமே, மிகுந்த அக்கறை கொண்டவர். உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான பின்னரும் கடுமையான அரசியல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையேயும் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின். மேலும், அவ்வப்போது சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வதும் வழக்கம்.

சைக்கிள் பயணம் வழக்கம்
அது மட்டுமல்ல, வாரத்திற்கு 2 முறை சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை அதிகாலை நேரத்தில் சைக்கிளில் செல்வார். ஆனால், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், கடந்த சில வாரங்களாக அவரால் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.

மீண்டும் நீண்ட தூரம்
இந்த நிலையில், மீண்டும் சைக்கிள் பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் சைக்கிள் பயணம் சென்றாலும் குறைந்த தூரம் தான் சென்றார். அப்போது அந்த புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் தற்போது முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை, நீண்ட தூரம் மீண்டும் அவர் சைக்கிள் ஓட்டியுள்ளார்.

கையுறை, ஹெல்மெட்
இன்று அதிகாலை 5 மணிக்கு முட்டுக்காட்டிற்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கிருந்து மாமல்லபுரம் நோக்கி அவர் சைக்கிள் ஓட்டியபடி புறப்பட்டார். சைக்கிள் ஓட்டும்போது, அதற்கான உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

பொதுமக்கள் செல்ஃபி
அவர் சென்ற வழிநெடுகிலும் சாலையோரம் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்தனர். அவரும் சைக்கிள் ஓட்டியபடியே பதிலுக்கு வணக்கம் தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார். சில இடங்களில் மக்கள் கோரிக்கையை ஏற்று அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார்.

தேனீர் சாப்பிட்ட ஸ்டாலின்
பயணத்தின்போது, மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர் கடையில் திடீரென அமர்ந்து தேநீர் அருந்தினார். தமிழகத்தின் முதல்வர் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து தேநீர் அருந்துவதை அப்பகுதி மக்கள் வந்து ஆச்சரியமாக பார்த்தனர். கூட சேர்ந்து டீ குடித்தனர். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications