மொத்த கலரும் மாறுதே..வடக்கில் ராஜா ஆகும் ராணிப்பேட்டை! பணம் பார்க்கும் பனப்பாக்கம்..டாடாவின் சம்பவம்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி ஆலைக்கு செப்டம்பர் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் 17 நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் தமிழகம் திரும்பினார். இந்த பயணத்தில் 7600 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 19 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குகின்றன.

இதன் மூலம் சுமார் 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி தற்போது ஆலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்யும் ஆலை புதிய உற்பத்தி ஆலைக்கு செப்டர்பர் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இந்த ஆலையின் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
உலக அளவில் சொகுசு கார் உற்பத்தியில் மிகப்பெரும் ஜாம்பவான் நிறுவனமாக இருக்கும் ஜாக்குவார் தனது ஆடம்பர கார் மாடல்கள் மூலம் மிகப் பெரிய பிராண்டாக இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கார் பாகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு புனேவில் இருக்கும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகிறது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து பல பகுதிகளில் ஆலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் புதிய ஆலை அமைத்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இது தவிர ஏற்கனவே அந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்கு உள்ள கார் மாடல்களும் இங்கு தயார் செய்யப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஃபேஸ் லிப்ட், ஹைபிரிட் மாடல் கார்களையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்த புதிய ஆலையில் உருவாக்குகின்றன. பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பட்டையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 9,000 கோடி முதலீட்டில் இந்த ஆலை, உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இந்த ஆலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இதே போல ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பில் மெகா காலனி உற்பத்தி பூங்காவுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் ராணிப்பேட்டை 400 கோடியில் 250 ஏக்கரில் மாபெரும் காலணி தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதை அடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைகிறது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications