ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி! நம்பர்-1 தமிழகம் நிலையை அடைய திட்டங்கள்! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!
சென்னை : எந்தத் துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் எனவும், நம்பர் ஒன் நிலையை தமிழகம் அடைய தேவையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 'Tech Know 2022' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஆறு சிறந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி கடிதம் மற்றும் பணி ஆணைகளையும் வழங்கினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," எந்த துறையும் தனித்துறையாக செயல்பட முடியாது, ஒவ்வொரு துறையும் தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 'கல்வி, தொழில் மற்றும் உற்பத்தி துறை இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறந்த மாநிலம் தமிழ்நாடு
தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன. சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்பதைவிட, சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. நமது சாதனைகளுக்கு சமூக நீதி கொள்கையே முக்கிய காரணம்.

தமிழகம் எடுத்துக்காட்டு
எந்த துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் வெற்றி காண முடியும். இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

நம்பர் 1 நிலை
நம்பர் 1 என்ற நிலையை தமிழகம் அடையத் தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் தமிழகம் உயரிய நிலையை அடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது












Click it and Unblock the Notifications