தமிழக அரசின் தலைமைச்செயலாளர், டிஜிபி உள்பட திடீரென டெல்லி விரைந்த உயர் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் தலைமைச்செயலாளர் , டிஜிபி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் இன்று திடீரென டில்லி சென்றனர். தமிழக உள்துறை முதன்மை செயலாளா் எஸ்கே பிரபாகா், தமிழக முதல்வரின் செயலாளா் P.செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி J.K.திரிபாதி ஆகியோர் இன்று மாலை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் டில்லி சென்றனர்.
தமிழக அரசு தலைமை செயலாளா் சண்முகம் இரவு 7 மணி அளவில் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் டில்லி சென்றார்..

தமிழக அரசு உயா் அதிகாரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக டில்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. இ-பாஸ் முறையும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. அத்துடன் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எனவே தமிழக அரசு உயர் அதிகாரிகள் தற்போது டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications