"அசையுது கோட்டை".. தமிழக அரசின் அடுத்த டிஜிபி இவரா?.. டெல்லி பறக்கும் அமுதா.. நாளும் குறிச்சாச்சு போல
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்றும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது...

எனவே, இந்த இருவர் இடத்திலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.. தலைமை செயலாளர் பதவிக்கு சிலர் குறி வைத்திருப்பதை போலவே, டிஜிபி பொறுப்புக்கும் ஒருசிலர் வேகமாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
முக்கியமாக, மிகப்பெரிய பதவி ஒன்றில் அமர விரும்புகிறாராம்.. அந்தவகையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. அதாவது, தலைமை செயலாளரும் விரைவில் பணிஓய்வு பெறுவதால், அநேகமாக இவரை, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி நியமனம் செய்யலாம் என்றார்கள்.. பிறகு, டிஎன்பிஎஸ்சி. சேர்மன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று சொன்னார்கள்.. ஆனால், எதையுமே தலைமை செயலாளர் விரும்பவில்லையாம்.
சைலேந்திரபாபு: இதை அறிந்த சைலேந்திரபாபு, மறுபடியும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மன் பதவியை குறி வைத்துள்ளதாக தெரிகிறது. இதற்கும் சில முட்டுக்கட்டைகள் எழுந்தபடியே உள்ளதாகவும் சலசலக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது...
புதிய டிஜிபிக்கான லிஸ்ட் ஏற்கனவே டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம்தான் நாளை நடக்கிறது.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
10 பேர் லிஸ்ட்: புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் இருக்கிறார்களாம்.. இந்த 10 பேரில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகள் சொல்லும்போது, "இப்போதைக்கு நிலையில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என தெரிகிறது.. இந்த 3 பேரில் ஒருவரை தமிழகஅரசு தேர்வு செய்யும்.. தற்போதைய நிலவரப்படி டாப் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏகே விஸ்வநாதன் இருவருமே இருக்கிறார்கள்..
எதிர்பார்ப்பு: 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையன்று அரசு விடுமுறை.. வரும் 30-ம் தேதி சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது.. அதனால், 28-ம்தேதியே, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியின் பெயர் வெளியிடப்படலாம்" என்கிறார்கள். அடுத்த தலைமை செயலாளராக யார் பொறுப்பேற்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்புகள் ஏற்கனவே ஒருபக்கம் எகிறி வருகிறது.
சீனியாரிட்டி: காரணம், தலைமை செயலாளர் பதவிக்கு, பணிமூப்பு ஒரு கணக்கீடாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்டவர் அரசுடன் இணக்கமாக செல்பவராக இருக்க வேண்டும். அதனால், சீனியாரிட்டி அடிப்படையில், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், இளையவராக உள்ளவரையே, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. அப்படி இளையவரை தேர்வு செய்தால், அவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்ற விபரத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒருவேளை, மாநில அரசு தேர்வு செய்தவர் மீது, ஏதாவது, புகார்கள் இருந்தால், மத்திய அரசு அதற்கான விளக்கத்தை கேட்கும். எனவே, அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற ஆர்வம் எழுந்து வரும்நிலையில், நாளை நடக்க போகும் டெல்லி கூட்டமும் ஏகப்பட்ட டென்ஷனை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications