சமையல் கேஸ் + ரேஷன் கார்டு.. அக்கவுண்ட் ஓபன் பண்ணியாச்சா.. ஸ்பீடு எடுத்த ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்
சென்னை: மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துள்ளது.. இந்த கூட்டம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
ஆனால், தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கும்போது, அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகத்தினை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

இதற்கு, தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் அப்போதே ஒரு விளக்கம் தந்திருந்தார்..
யார் யாருக்கு பலன்: அதில், "ஏற்கெனவே, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடைய மாட்டார்கள். வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. ஆனால், கண்டிப்பாக ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயமாக ரூ.1000 உரிமைத் தொகையைப் பெறுவார்கள்" என்று கூறியிருந்தார்.
எனினும், பல்வேறு யூகமான தகவல்கள் இணையத்தில் வலம்வந்தன.. அதன்படி, வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்கிறார்கள்.. ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றார்கள். அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றார்கள்..
PHAAY: பிறகு, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்றார்கள்.. புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்றார்கள்.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்கள்.. இப்படி பல்வேறு தகவல்கள் வட்டமடித்து வரும்நிலையில், இதுவரை அரசிடமிருந்து திட்டம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை.
சந்தேகங்கள்: மற்றொருபுறம் ரூ.1000 உரிமைத்தொகையை ரேஷன் கார்டு மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுமா? என்ற சந்தேகங்களும் கிளம்பியவாறே உள்ளது. எனினும் தமிழக அரசோ, தன்னுடைய பணிகளை ஜரூராக துவங்கி செய்து கொண்டிருக்கிறது.. அதன்படி 2 நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது..
சமையல் கேஸ்: ஒன்று, வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சல் கணக்குகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில் குடும்ப தலைவி பெயரில் அஞ்சல்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க, சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மற்றொருபக்கம், புதிய ரேஷன் கார்டுகளை விநியோகிக்கும் பணியில் மும்முரமாகி உள்ளது. இதற்காக வீடுகளில் எத்தனை சமையல் கேஸ் சிலிண்டர்கள் உபயோகிக்கப்படுகின்றன என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் வேகம் எடுத்துள்ளது.. மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்... அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி, சாத்தூர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உரிமைத்தொகை: அப்போது, தகுதி வாய்ந்த மகளிரை தேர்ந்தெடுப்பது, வழிமுறைகளை நிர்ணிப்பது, அரசாணை வெளியிடுவது முன்னிட்டு பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.. உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதிகளை இறுதி செய்வது, உரிமைத் தொகைப் பெற பெண்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், உரிமைத்தொகையை மாதந்தோறும் மகளிருக்கு வழங்கும் முறை என பல்வேறு நடைமுறைகள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் துவக்கப்பட்டு உள்ளது.. அந்த மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்தும், தமிழகத்தில் எத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் உத்தரவு: அத்துடன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தை செயல்படுத்த இன்னும் 60 நாட்களே உள்ளதால், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
எனினும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பயனாளர்கள் யார் யார் என்ற குழப்பம், பொதுமக்களிடம் வட்டமடித்துக் கொண்டேயிருக்கிறது..
நிலவும் குழப்பம்: மொத்தம் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் இருக்கும்நிலையில், ஒரு கோடி பேருக்கு மட்டும் எப்படி உரிமைத்தொகையை வழங்க முடியும்? ஒரு கோடி பேருக்கு 1000 ரூபாய் வீதம் கொடுத்தாலும், வருடத்துக்கு 12000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், 7000 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே எப்படி? யார் யாருக்குதான் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது? என்ற குழப்பம் மேலோங்கி வருகிறதாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications