மதுரையில் இருந்து சென்னை திரும்பியதும் வேளச்சேரி போன முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ வைத்த 'நன்றி' போஸ்ட்!
சென்னை: அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கரூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கியும் கரூரில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

கரூர், திண்டுக்கல் நிகழ்ச்சிகள்
இதனைத் தொடர்ந்து மாலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் சென்றார் முதல்வர் ஸ்டாலின். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார் ஸ்டாலின். கரூர், திண்டுக்கல் பயணங்களை முடித்துக் கொண்டு இரவே சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

வேளச்சேரியில் ஆய்வு
சென்னை திரும்பியதும் வேளச்சேரி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னையில் மழை பெய்தால் வேளச்சேரியின் பெரும்பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டும் வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுவதும்தான் காட்சியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கொட்டும் மழையில் வேளச்சேரியில் நீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உள்ளாட்சிப் பணியாளர்கள்
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளதாவது: மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!

ஊழியர்களுக்கு நன்றி
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த நன்றி பதிவு, மழையில் பணியாற்றும் ஊழியர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications