சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிஞ்சதும் பாருங்க.. என்ன நடக்குதுன்னு.. சாட்டையை சுழற்ற ரெடியான ஸ்டாலின்.. கோட்டையில் திக்திக்!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு விரைவில் பொறுப்புகள் மாற்றப்படலாம் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: நாளை குடியரசுத் தின விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், அவர்களை பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

ஸ்டாலின் போட்டு உத்தரவு.. நைட்டுனு கூட பார்க்கலையே.. வெளுத்து வாங்கிய திமுக! காங்கிரஸே மிரண்டுடுச்சே ஸ்டாலின் போட்டு உத்தரவு.. நைட்டுனு கூட பார்க்கலையே.. வெளுத்து வாங்கிய திமுக! காங்கிரஸே மிரண்டுடுச்சே

 அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

அதேபோல் 2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பு உள்ளது. இவர்களுக்கு junior administrative grade அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மூத்த அதிகாரிகளான 1999-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், இணை அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தமிழக உள்துறை தயாரித்த ரிப்போர்ட் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

மூத்த அதிகாரிகள்

மூத்த அதிகாரிகள்

அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாட்டை வைத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி திருச்சி ஆட்சியர் பிரதீப் இணை அரசு செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் த நந்தகுமார் ஐஏஎஸ் அரசு செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இது போக இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 5 ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாகவும், 5 டிஐஜிக்களுக்கு ஐஜிக்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 25 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில்தான் நாளை குடியரசுத் தின விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை குடியரசு தினம் முடிந்து பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபின் செயலாளர்கள் மாற்றம் பெரிதாக நடக்கவில்லை. முக்கியமாக புதிதாக மாற்றப்பட்ட துறைகளுக்கு புதிதாக செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதை கவனத்தில் கொண்டு செயலாளர்கள் மாற்றம் சிறிய அளவில் இருக்கலாம் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் புகார்களை வைத்து வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதன் பொருட்டு சில ஐபிஎஸ் அதிகாரிங்கள் மாற்றமும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் பற்றி தகவல் சென்றுள்ளது. சில அதிகாரிகள் பற்றி புகார் சென்றுள்ளது. சில அதிகாரிகள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு முக்கிய துறை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறதாம். இதை எல்லாம் மனதில் வைத்து குடியரசுத் தினத்திற்கு பின்பாக முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்று கூறப்படுகிறது.

English summary
Tamil Nadu CM Stalin action: IAS, IPS officers transfer on the cards in the state after Republic Day .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X