"நான் ஏன் கோட் சூட் போட்டு வந்துள்ளேன் தெரியுமா.." அடுத்து வரி முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்.. அடடே
சென்னை: இன்று உலக தமிழர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏன் கோட் சூட் போட்டு வந்துள்ளேன் என்பது பற்றி விளக்கமளித்தார். அவரது பதில் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
உலகளவில் இருந்து பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இப்போது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகச் சென்னைக்கு மட்டுமே அதிக முதலீடுகள் கிடைக்கும் நிலையில், இப்போது பரவலாக அனைத்து பகுதிகளிலும் முதலீடுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலீடுகள்: இந்த மாநாட்டில் முதல் நாளான இன்றே பல முதலீடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹6180 கோடி கூடுதலாக முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் ₹ 5600 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், கோத்ரேஜ் நிறுவனம் ₹515 கோடியும் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ₹200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
"சென்னையில் பெய்த மழையை போல.. தமிழகத்திலும் முதலீடு மழையாக பெய்யும்.." முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இது மட்டுமின்றி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ₹12,082 கோடி முதலீடு செய்துள்ளது இதன் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெகட்ரான் நிறுவனம் ₹1000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். JSW நிறுவனம் 6600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ. 10,000 கோடி முதலீடு செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனமும்- ரூ 5000 கோடி முதலீடு செய்துள்ளது.
ஹூண்டாய் தலைவர்: இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொழில் தொடர்பு உள்ளதாக ஹூண்டாய் நிர்வாக அதிகாரி அன்சு ஜிம், தமிழ்நாட்டில் கடந்தாண்டு ₹20,000 கோடி செய்த ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ₹6000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார். மேலும், உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தமிழ்நாடு அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாக பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், "நாட்டின் பல துறைகளில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழன் என்ற முறையில் நான் பெருமையாக இதைச் சொல்கிறேன்.. எளிதாகத் தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்தை அடைந்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறையில் தொடர்ந்து மிளிரும் என நம்புகிறேன். அமைதியான சூழல், சீரான சட்டம் ஒழுங்கு, திறமையான பணியாளர்கள் இருப்பதால் பல சர்வதேச நிறுவனங்களின் இலக்காகத் தமிழ்நாடு இருக்கிறது" என்றார்.
மத்திய அமைச்சர் பாராட்டு: இந்த நிகழ்வில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின்: இந்த மாநாட்டில் இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார். கடந்த 2.5 ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் கடந்த 2 ஆண்டுகளில் பல தொழில் கொள்ளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. என்றும் அவர் தெரிவித்தார்.
கோட் சூட்: வழக்கமாக வேட்டி சட்டை அணிந்தே அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறை, கோட் சூட் அணிந்து கலந்து கொண்டார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
இது குறித்து அவர் பேசுகையில், "பொதுவாக நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால், இன்று அனைத்து வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக இருக்கிறது" என்றார். அவரது பேச்சு இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications