என்னங்க நடக்குது.. சரமாரியாக கேள்வி கேட்ட ஸ்டாலின்.. வீடியோ காலில் அதிகாரிகள்.. அந்த நொடி!
சென்னை: தமிழ்நாட்டில் சில நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். பலர் வரிசையாக மாற்றப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக சில விஷயங்களை பேசி உள்ளாராம்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
ஸ்டாலின் பேச்சு: தமிழ்நாட்டில் சில நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். பலர் வரிசையாக மாற்றப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக சில விஷயங்களை பேசி உள்ளாராம்.
மக்களுடன் முதல்வர் தொடர்பான அதிகாரிகள் கூட்டத்தில், மக்களின் குறைகள் எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டு உள்ளது. கடிதங்களுக்கு எந்த அளவிற்கு தீர்வுகள் காணப்பட்டு உள்ளன. அத்தியாவசிய தேவைகள் எந்த அளவிற்கு சரி செய்யப்பட்டு உள்ளன.
நம்முடைய திட்டங்களுக்கு மக்கள் இடையே வரவேற்பு எப்படி உள்ளது. ஒரு நாளைக்கு பெறக்கூடிய மனுக்கள் எத்தனை. அதில் தீர்வு காணப்படும் மனுக்கள் எத்தனை என்று கேட்டுள்ளார். அதோடு சில அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு உங்கள்; பிரிவில் நீங்கள் சரியாக செயல்படவில்லை என்று எனக்கு தகவல்கள் வருகின்றனவே.. என்று கடிந்தபடியும் ஸ்டாலின் பேசி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications