நீட்: விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் உறுதி
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி அளித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அத்தீர்மானம் வலியுறுத்தி இருந்தது. இத்தீர்மானம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனாலும் ஜனாதிபதிக்கு இம்மசோதாவை ஆளுநர் ரவி அனுப்பி வைக்கவில்லை.

டெல்லியில் மனு
இதையடுத்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியது. மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
தமிழக ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக எம்.பிக்கள் எழுப்பினர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆளுநரின் செயல்பாட்டை நாடாளுமன்றத்திலேயே விமர்சித்திருந்தார். இதற்கு மறுநாளே கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது தொடர்பான குறிப்பில்,
நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என்பது மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என ஆளுநர் கருதுகிறார். கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு இது எதிரானது என ஆளுநர் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என்பது மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என ஆளுநர் கருதுகிறார். கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு இது எதிரானது என ஆளுநர் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது.

சட்டசபையில் மீண்டும் தீர்மானம்
ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பிப்ரவரி 8-ந் தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனாலும் ஆளுநர் இம்மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் மீண்டும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தல்
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆளுநரின் செயல்பாட்டையும் திமுக எம்.பிக்கள் கண்டித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சந்தித்தார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

உறுதி அளித்த ஆளுநர்
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு உடனே அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் கோப்புகள், சட்ட முன்வடிவுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டசபையின் மாண்பை காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வை மதிப்பாக அமைந்திரும் எனவும் ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications