விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட். ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! சிஎம் விஜய் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தள்ளுபடி வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

Crop Loan Vijay Agriculture

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து வந்த கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்தது. இதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனை நடத்தினர்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் அதன் முழுத் தொகையையும் மாநில அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இதனையும், தமிழக அரசின் தற்போதைய நிதிநிலையையும் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.

புதிய அறிவிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது, 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும்.

அதேநேரத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை நிவாரணம் கிடைக்கும்.

அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகள் பயனடைய உள்ளனர்.

இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் 5 லட்சத்து 16 ஆயிரத்து 183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடி தள்ளுபடி கிடைக்க உள்ளது.

மேலும் 93 ஆயிரத்து 548 இதர பெரு விவசாயிகளுக்கும் ரூ.337.15 கோடி அளவிலான கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மொத்தமாக ரூ.5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் அடுத்த சாகுபடி பருவத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மீண்டும் கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய கடன்களை பெற்று சாகுபடியில் ஈடுபட இந்த திட்டம் உதவும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை மாறுபாடு, உற்பத்திச் செலவு உயர்வு, உரம் மற்றும் தொழிலாளர் செலவின அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், மாநிலத்தின் மிகப்பெரிய விவசாய நலத் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+