நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை வைக்கக் கூடாது என எப்படி கூறலாம்? தமிழக காங். எஸ்.சி.துறை எதிர்ப்பு
சென்னை: அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறுவது நீதிமன்றங்களுக்கு பெருமை சேர்க்காது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறை மாநிலத் தலைவர் ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுவதாவது;

''தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும்.. மற்ற தலைவர்களின் படங்கள் நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் படத்தை நீக்க அறிவுறுத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
இந்திய நாடு விடுதலை பெற்றபோது நமது அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை மூலமாக வடிவமைக்க வேண்டும் என்று முடிவு செய்த போது அப்பொறுப்பை திறம்பட செய்வதற்கு தகுதியானவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் என்று முடிவெடுத்து, அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவராக காந்தியடிகள், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டார். இப்பணியை அவர் செய்வதன் மூலமே அன்றைய இந்தியாவில் நிலவிய ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து அனைவரது உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்கள்.
அனைவரும் போற்றி, பாராட்டத்தக்க வகையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கப்பணிகளை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில் செய்து முடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அப்பணியை மிகவும் கவனமாக, தனது பொன்னான நேரம் முழுவதும் செலவிட்டு, மேற்பார்வையிட்டு 395 பிரிவுகளும், 22 பாகங்களும், 8 அட்டவணைகளும், 80 ஆயிரம் வார்த்தைகளும் கொண்ட அரிய ஆவணமாக நமது அரசமைப்பு சட்டம் உருவானதற்கு அன்றைய அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்களின் ஒத்துழைப்போடு டாக்டர் அம்பேத்கரின் பேருழைப்பு பின்பலமாக இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது.

இன்றைய இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் அனைத்து மக்களின் உரிமைகளையும் சட்ட ரீதியாக பாதுகாக்கிற கவசமாக திகழ்ந்து வருகிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நிகழ்கிற போது நீதித்துறையின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. ஒரு குடிமகனுக்கு ஏற்படுகிற அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது அரசமைப்பு சட்டமே. அந்த அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி தான் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை இயங்குகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாள் என்று அறிவிக்கப்பட்ட அன்று தான் அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இன்றைக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஆவணமாக விளங்குகிற அரசமைப்பு சட்டத்தின் வரைவுக்குழு தலைவராக இருந்து, அதைதயாரித்து அளித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது, அப்படி வைத்தால் அகற்றப்படும் அன்று கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தயாரித்து அளித்த அரசமைப்பு சட்டத்தின்படி தான் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்புகள் எழுதுகிறார்கள்.
அத்தகைய நீதிமன்றங்களில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வைப்பதுதான் நீதிமன்றங்களுக்கு பெருமை சேர்க்கும் செயலாகும். அதற்கு மாறாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறுவது நீதிமன்றங்களுக்கு பெருமை சேர்க்காது. எனவே டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பபெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பாக கனத்த இதயத்தோடு வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் சமூக நீதி காவலராக உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு நீதிமன்றங்களில் மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்தை வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications