தேங்காய் சிதறிடுச்சே.. போலீசுக்கு ஓடிய செல்வப்பெருந்தகை.. அண்ணாமலை பற்றி கமிஷனர் சொன்ன அந்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் "மோதல்" முற்றிவரும் நிலையில், அதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதிலிருந்தே, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.. ஒருபக்கம் பாஜகவை விமர்சித்து கொண்டே, தமிழக காங்கிரஸின் கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறார்.

Annamalai Selvaperunthagai TN Congress

திமுக : "கடந்த 57 வருஷமாக நாம் ஏமாந்ததெல்லாம் போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வளர வேண்டும்.. தமிழகத்திலும் காங்கிரஸ் ஆள வேண்டும்" என்று நிர்வாகிகளிடமும், செய்தியாளர்களிடமும் செல்வப்பெருந்தகை வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், திமுக உட்பட பல்வேறு கட்சிகளை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.

இதில், சமீப நாட்களாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், செல்வப்பெருந்தகைக்கும் வார்த்தைப்போர் வலுத்து வரும்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

செல்வப்பெருந்தகை: இதற்கு செல்வப்பெருந்தகை, "பாஜகவில் நிறைய ரவுடிகள் உள்ளனர்" என்று கூறி லிஸ்ட் ஒன்றை வெளியிடவும், "செல்வப்பெருந்தகையே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்தான்" என்று சொல்லி தமிழக அரசியல் களத்தையே சூடாக்கிவிட்டார் அண்ணாமலை. இப்படி 2 கட்சி தலைவர்களுமே ஒருவரையொருவர் டார்கெட் செய்து, தங்களது அடுத்தக்கட்ட "நகர்வை" துவங்கியிருக்கிறார்கள்.

அந்தவகையில், செல்வப்பெருந்தகைக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் அண்ணாமலை. குறிப்பாக, செல்வப்பெருந்தகை லண்டனில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை, அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

அண்ணாமலை: மற்றொருபுறம், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, நேற்று முன்தினம், நேரடியாக போலீசுக்கே சென்று அண்ணாமலை மீது புகார் தந்திருந்தார் செல்வப்பெருந்தகை.. இதையடுத்து அண்ணாமலை கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேமாகமான தகவல் கிடைத்திருக்கிறது.. அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வன் கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேற்று முன் தினம் சந்தித்து புகார் கொடுத்திருந்தார் செல்வப்பெருந்தகை.

போலீசில் புகார்: அப்போது, இந்த சந்திப்பில், கூடுதல் கமிஷனர் சிபி சக்கரவர்த்தியும் உடனிருந்துள்ளார்... செல்வப்பெருந்தகையின் புகாரை படித்துப் பார்த்த அருண், "வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்கிற அளவுக்கு அழுத்தமானதாக புகார் இல்லையே.. அவதூறு வழக்குப் பதிவு செய்வதற்கான செக்‌ஷனும் பொருந்தவில்லையே" என்றாராம்.

இதைக்கேட்ட செல்வப்பெருந்தகை, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அருணிடம் விவாதித்தாராம்.. ஆனாலும், கைது செய்கிற அளவுக்கு புகார் வலிமையாக இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் செல்வப்பெருந்தகையிடம் சொன்னாராம் அருண்.

ஏமாற்றம்: அண்ணாமலைக்கு எதிராக சாதிக்கலாம் என போலீஸ் கமிஷனரை சந்திக்க வந்த செல்வப்பெருந்தகைக்கு, இது ஏமாற்றமாக இருந்ததால், பின்புறவழியாக வெளியேறி கிளம்பி சென்றதாக தகவல் கசிந்துள்ளது.. இத்தனைக்கும் இந்த புகார் மனுவை, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் ஆலோசனையை பெற்று தயாரிக்கப்பட்டும்கூட, புகார் மனு வலுவற்றதாகப் போய்விட்டதே என்று நொந்து போய்விட்டாராம் செல்வப்பெருந்தகை. இதையடுத்து, அடுத்தக்கட்ட யோசனையிலும் செல்வப்பெருந்தகை ஈடுபட்டு வருகிறாராம்...!!!

சாத்தியமா: எனினும், இன்றைய தினம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்த பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. இதற்கு காரணம், அதிமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே சுமூகமான போக்கு நிலவி வருவதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு, அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.. அதேபோல, நேற்றைய தினம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

எனினும், அதிமுக - நாம் தமிழர் கட்சி கூட்டணி சாத்தியமா? என்று தெரியவில்லை.. திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவே, நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியதாக அக்கட்சியினர் சொல்லிவரும் நிலையில், இப்படியொரு கூட்டணி இனி சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை. ஆனால், பாமகவை இந்த முறை, அதிமுக லேசில் நழுவவிடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+