குஷ்புவை ஃபாலோ செய்யும் காங்.’பிரபலம்’? என்ன கண்டுக்கவே மாட்றாங்க! புலம்பித் தவிக்கும் ச.ம.உ! ஜம்ப்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில மாதங்களாகவும் சரி, கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகையின் போதும் சரி, எம்பி ஒருவருக்கு கொடுத்த மரியாதையை உள்ளூர் பிரமுகரான தனக்கு தரவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், நடிகை குஷ்பு போல காங்கிரஸ் கட்சியிலிருந்து 'வேறு' கட்சிக்கு தாவி விடலாமா என யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் தென் கடைக்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாதயாத்திரையை துவக்கி இருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சுமார் நான்கு நாட்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டிருந்த ராகுல் காந்தி பல இடங்களில் நடந்து சென்று தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை பிரிவினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் ஏன் எதிர்க்கட்சினரே கூட மறைமுகமாக ராகுல் காந்தியின் செய்கைகள்,நடவடிக்கைகள், பொதுமக்கள் தொண்டர்களை அணுகும் விதம் ஆகியவற்றை பாராட்டி வருகின்றனர், செல்லும் வழியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்த ஏற்பாடு வெகுவாக ராகுல் காந்தியை கவர்ந்திருக்கிறது. அவரே காங்கிரஸ் நிர்வாகிகளை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்த பாத யாத்திரையின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பிரபலங்களை அதிகம் பார்க்க முடிந்தது.

 கரூர் எம்பி ஜோதிமணி

கரூர் எம்பி ஜோதிமணி

தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் நடந்து கொண்டதும் தெளிவாகவே இருந்தது. இந்த நிலையில் தான் கரூர் எம்பி ஜோதிமணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தனக்குத் தரவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தற்போது மட்டுமல்ல கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் கே எஸ் அழகிரியை தவிர மற்ற நிர்வாகிகள் தன்னை மதிப்பதில்லை என கூறி வருகிறாராம். இதற்கெல்லாம் காரணம் என்ன என தெரியவில்லை என க்ன்னியாகுமரி நிர்வாகிகளிடம் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த காங்கிரஸ் பிரபலம் நிர்வாகிகள் மீதும், காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பிரபலத்தின் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். கட்சியில் ஏற்கனவே ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், ஈவிகேஸ் இளங்கோவன் என பல முக்கிய தலைகள் இருக்கும் நிலையில் அவர்களையெல்லாம் விட காங்கிரஸ் கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழகத்தில் அதிரடி அரசியலை முன்னெடுத்துச் செல்வேன் என பேசியதாகவும் இதனால் தன்னை கட்சியிலிருந்து திட்டமிட்டு ஓரங்கட்டுவதாக நிர்வாகிகளிடம் கூறி புலம்பி இருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான கே.எஸ்.அழகிரியை பொருத்தவரை ஓரளவு ஆதரவு தந்தாலும் மற்ற நிர்வாகிகள் தன்னை ஒதுக்குகிறார்கள் குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்திய பாதயாத்திரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என தனக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவத்தையும் உள்ளூர் நிர்வாகிகள் வழங்கவில்லை எனவும், கரூர் எம்பி ஆன ஜோதிமணிக்கு தரப்பட்ட முக்கியத்துவம் தனக்கு இல்லை என வருத்தப்பட்டு இருக்கிறார்.

பாஜகவுக்கு தாவல்

பாஜகவுக்கு தாவல்

கடந்த காலங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் பேட்டிகள் என கலக்கி வந்த அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊடக வெளிச்சம் படாமல் இருக்கிறார். விவாதங்களுக்கு அழைக்கும் நெறியாளர்களிடம் கட்சியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன பேசுவது என எதிர் கேள்வி கேட்கிறார். அதே சமயத்தில் பாஜக ஆட்சி நன்றாக போய்க் கொண்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார் அவர். குஷ்பூவை போல பேசாமல் வேறு கட்சியில் சேர்ந்து விடலாமா என யோசிக்கிறேன் எனவும் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் வெளிப்படையாகவே பேசி விட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+