தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5,584 பேர் பாதிப்பு.. வேகமாக குறையும் நோயாளிகள் எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5500 என்கிற அளவிற்கு மாறி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அளவு இன்று 82 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரானாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை நேற்றை போல் இன்றும் 6500ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் மிக அதிகம்

டிஸ்சார்ஜ் மிக அதிகம்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,516 பேர் குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,231
ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1154 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 580 பேரும், சேலத்தில் 588 பேரும் கடலூரில் 3292 பேரும், செங்கல்பட்டில் 386 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை பலி எண்ணிக்கை

இதுவரை பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 78 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 9 பேரும், கோவையில் 6 பேரும், திருச்சி, கிருஷ்ணகிரியில் தலா 5 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

 நோயாளிகள் எண்ணிக்கை

நோயாளிகள் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 82,573 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 55,44,850 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 80,401/ தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 53,66,224பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் தற்போது 49,203 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கோவையில் உயர்வு

கோவையில் உயர்வு

சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 144595 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் தற்போது 10854 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 445 பேரும், கடலூரில் 344 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும், சேலத்தில் 279 பேரும், திருவள்ளூரில் 281 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+