தமிழகத்தில் இன்று 2504 பேருக்கு கொரோனா.. 20 ஆயிரமாக குறைந்த நோயாளிகள் எண்ணிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,27,026 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 20,994 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சென்ற மாத தொடக்கத்தில் 5500 என்கிற அளவில் இருந்த நிலையில் தற்போது 2500 ஆக குறைந்துவிட்டது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 20 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர். உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிக குறைவாகவே உள்ளது.

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,27,026 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு

டிஸ்சார்ஜ் எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3644 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,94,880 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 792 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 573 பேரும், சேலத்தில் 286 பேரும், செங்கல்பட்டில் 175 பேரும், காஞ்சிபுரத்தில் 110 பேரும், கன்னியாகுமரியில் 113 பேரும் மீண்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு மரணம்

இதுவரை எவ்வளவு மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 30 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், வேலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 73,012 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,00,29,222 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 71,797 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 97,60,029 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 20,994 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாவட்ட பாதிப்பு

மாவட்ட பாதிப்பு

சென்னையில் குணம் அடைவோர் அதிகமாகவும் தொற்று பாதிப்பு குறைவாகவும் உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 686 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200533 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 7005 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 248 பேரும், செங்கல்பட்டில் 145 பேரும், சேலத்தில் 110 பேரும், திருவள்ளூரில் 136 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+