அடடா.. இதெல்லாம் வேற லெவல் யோசனை.. களமிறக்கப்பட்ட டிஆர்பி ராஜா டீம்.. தமிழ்நாட்டிற்கு அடித்த லக்
சென்னை: கடந்த மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடுத்த கட்ட செயல்பாடுகளை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதலீடுகள் தொழில்களாக முறையாக மாறுவதை கண்காணிக்க இந்த குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் இதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் இரண்டு நாட்களாக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
உதாரணமாக டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 40,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
குழு அமைப்பு: இந்த நிலையில்தான் கடந்த மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடுத்த கட்ட செயல்பாடுகளை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதலீடுகள் தொழில்களாக முறையாக மாறுவதை கண்காணிக்க இந்த குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக இது போன்ற மாநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கும். ஆனால் தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தங்களை தொழில்களாக முறையாக மாறுவதை கண்காணிக்க குழு நியமித்து உள்ளது.
இதுவரை செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எந்த கட்டத்தில் உள்ளது என்பதை இந்த குழு கண்காணிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications