Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவம் ஏழை.. 100 நாள் வேலை ஊதியம் என்னாச்சு? 3300 கோடியை உடனடியாக கொடுங்க! மத்திய அரசை கேட்கும் ஐ.பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3300 கோடி நிதி விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதமும் எழுதியுள்ளார்.

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமங்களில் விவசாயிகள் பெண்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த வேலை வழங்கப்படுகிறது.

i Periyasamy chennai MGNREGA

அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊரக வேலை திட்டத்திற்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3300 கோடி நிதி விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எழுதியுள்ள கடிதத்தில்," மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களில், 388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

ஊரகப்பகுதிகளில் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்க முன்னரும் மக்களுக்கு வேலை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 85.19 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 1கோடியே 9லட்சம் தனிநபர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 28.45 கோடி மனித சக்தி நாட்கள் பணி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வேலை நாட்களுக்கு இது 142 சதவீத சாதனையாகும். பணிகளை மேற்கொள்ளும் மொத்த பணியாளர்களில் பெண்கள் 86 சதவிதமாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதமாகவும் பழங்குடியினர்கள் பங்களிப்பு 1.63 சதவீதமாகவும் உள்ளது. எனவே. இத்திட்டத்தின் கீழ் அதிக பயனடைபவர்கள் பெண்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினராக உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் இவ்வகுப்பினரின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. மேலும்,இத்திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனர். 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகளும்

i Periyasamy chennai MGNREGA

எனவே, இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் பெரும்பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால் இத்திட்டப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்குவது காலதாமதம் ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் இத்திட்ட பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை 2400 கோடியாகவும், திட்டத்தின் கீழ் கட்டப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருட்கூறு நிலுவை 852 கோடியாகவும் உள்ளது. நிலுவையிலுள்ள திட்ட நிதியை விடுவிக்ககோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

i Periyasamy chennai MGNREGA

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நிலுவையிலுள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+