Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஈனபிறவிகள்".. உங்க வலியை நான் உணர்வேன்.. திடீரென கோபப்பட்ட திமுக எம்எல்ஏ.. ரெடியாகும் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ட்விட்டரில் கோபமாக வெளியிட்டு இருக்கும் சில கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் வரிசையாக சமூக வலைத்தளத்தில் அவர் கடும் கோபத்துடன் சில ட்விட்களை பதிவிட்டு வருகிறார்.

திமுகவிற்கு எதிராக சிலர் தவறான அவதூறுகளை பரப்புவதாக கூறி டிஆர்பி ராஜா புகார்களை அடுக்கி உள்ளார்.

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

அதன்படி டிஆர்பி ராஜா தனது ட்விட் ஒன்றில், தொடர்ந்து கழகம் மீதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் நமது முதலமைச்சர் மீதும் அவதூறு பரப்பும் ஈனபிறவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது !!! எதற்கும் அளவு உண்டு... ஜனநாயக மிகுதியும் நல்லதல்ல, என்று குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட பழைய ட்விட்டை அவர் மீண்டும் ஷேர் செய்து இப்படி விமர்சித்துள்ளார்.

கோபம்

கோபம்

மேலும், இந்த நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஜனநாயக மிகுதி நல்லதல்ல. ஆட்சி இல்லாதபோதும் துணிந்து எதிர்த்து களம் கண்ட நம் தோழர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களோடு களம் கண்டவன் என்ற முறையில் அவர்களது வலியை நான் உணர்வேன் எனவே அவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன், என்றும் குறிப்பிட்டு உள்ளார். கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பும் சிலர் மீது ஆளும் திமுக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைதான், ஜனநாயக மிகுதி நல்லதல்ல என்று இவர் குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

ஐடி விங்

ஐடி விங்

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. அவர்கள் மீது அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனம் திமுகவினர் இடையே உள்ளது. முக்கியமாக மின்வெட்டு குறித்து சிலர் ஆதாரமற்ற கருத்துக்களை பரப்புவதாக திமுக நெட்டிசன்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

பூ பாதை

பூ பாதை

மேலும் அவர் தனது இன்னொரு ட்விட்டில், அரசியலில் எதை எப்போது சொல்லவேண்டும் எதை ஒருபோதும் சொல்லகூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நமக்கு இந்த பூ பாதையெல்லம் செட் ஆகாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனக்கு களத்தில் இறங்கி சண்டை செய்பவர்கள்/செய்தவர்கள் தான் முக்கியம், என்று குறிப்பிட்டுள்ளார். விஷமிகள் என்று யாரை குறிப்பிடுகிறார், யார் மீது இவ்வளவு கோபமாக டிஆர்பி விமர்சனம் வைக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புகார் அளியுங்கள்

புகார் அளியுங்கள்

திமுக ஐடி விங்கின் புதிய செயலாளராக எம்எல்ஏ டிஆர்பி ராஜா செயல்பட்டு வரும் நிலையில் அவர் தற்போது கோபமாக அடுத்தடுத்து போஸ்ட்களை செய்துள்ளார். சமீபத்தில் திமுக ஐடி விங் சார்பாக @ITWreports என்ற கணக்கு துவங்கப்பட்டது. @ITWreports என்பது எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளை ரிப்போர்ட் செய்யும் ஐடி ஆகும். திமுக பற்றி பரவும் வதந்திகளை பற்றி திமுகவினர் அல்லது திமுக ஆதரவாளர்கள் இந்த கணக்கில் புகார் அளிக்க முடியும்.

 பூ பாதை

பூ பாதை

அந்த வதந்திகளுக்கு திமுக தரப்பு விளக்கம் அளிக்கும். அவதூறாக இருக்கும் பட்சத்தில் போலீஸ் தரப்பில் நேரடியாக புகார் அளிக்கப்படும் வகையில் இந்த கணக்கு உருவாக்கப்பட்டது. இந்த "ரிப்போர்ட்" கணக்கு மூலமாக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கும் முடிவை எம்எல்ஏ டிஆர்பி எடுத்து இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை முன்னிட்டே இனி பூ பாதை செட்டாகாது என்று குறிப்பிட்டுள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+