தேர்தலுக்கு தமிழகம் தயார்.. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை..தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டி
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட சில இடங்களில் விதிமீறல்கள் உள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தேர்தல் ஆணையர் பேட்டி
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார், , "21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி களுக்கான தேர்தலில் 2.83 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும், வேட்பாளர்கள் இறந்த, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட, அல்லது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது என 295 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

தீவிர கண்காணிப்பு
மேலும் தேர்தல் நாளை சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் முதல் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை ஆவடி தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம்; விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப் ஸ்ட்ரீம் மூலம் பார்வை
வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடங்கள், வாக்கு எண்ணிக்கை இடங்களில் சிசிடிவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 268 வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் பலத்த பாதுகாப்பு
கோவை நகர் பகுதியில் மட்டும் 2,723 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகரம் மற்றும் கோவை மாவட்டத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்று சொல்வதை ஏற்கமுடியாது என கூறிய தேர்தல் ஆணையர் பழனி குமார், கோவையில் தங்கியிருந்த வெளியூர்க்காரர்களை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications