மின்வாரியம் தந்த சர்ப்ரைஸ்.. இனி கரண்ட் பிரச்சனையே வராது.. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் போட்ட ஆர்டர்
சென்னை: மும்முனை மின்சாரம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
வீடுகள், கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, மாநகரம், நகரங்களில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கிராமங்களில் மட்டும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. காரணம், கிராமங்களில் செல்லும் மின் வழித்தடங்களில், வீடு, கடைகள் போன்றவை மட்டுமின்றி, விவசாயத்திற்கும் வினியோகம் செய்யப்படுகிறது...
மின்சாரம்: விவசாயத்திற்கு கரண்ட் இலவசம் என்பதால், தினமும் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என, மொத்தம் 12 மணி நேரம் மட்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.. மற்ற நேரங்களில், மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
இதன்காரணமாக, கிராமங்களில் மக்கள் பெருத்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது.. முக்கியமாக, மாவு ஆலைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இயந்திரங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றன.. இத்தனைக்கும் எல்லா தரப்பினரும் ஒரே மின் கட்டணத்தைதான் செலுத்துகிறார்கள். அப்படியிருந்தும்கூட, கிராம மின் வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்குவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
தொழிற்சாலை: இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சேவியர் என்பவர் இதற்கு ஒரு காண முற்பட்டார்.. எனவே, தன்னுடைய தொழிற்சாலைக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.. அத்துடன் அனைத்து கிராமங்களுக்குமே, 24 மணி நேரமும் மும்முனை மின்சார வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டபுள் மகிழ்ச்சி: விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில், கரண்ட் பிரச்சனை வந்துவிடுமே என்று கலங்கி போயிருந்தனர் கிராம மக்கள். தற்போது ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவானது, மக்களுக்கு பெருத்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications