பிஇ, பிடெக் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.. ஜூலை 22ல் ரேண்டம் எண் ரிலீஸ்
Tamil Nadu Engineering Admissions 2022 (TNEA 2022): தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நாளை (20ந் தேதி ) முதல் துவங்குகிறது.
சென்னை: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்க உள்ளது.

மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், 110 மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.
இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் ஜூலை 22 ந் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 31 ந் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.
ஆகஸ்ட் 16 முதல் 18 ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 22 ந் தேதி முதல் அக்டோபர் 14 ந் தேதி வரை நடைபெறும்.
இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17,18 ந் தேதிகளில் நடைபெறும்.
மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014,044-22351015 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications