கலக்குறாங்களே சுப்ரியா சாஹூ.. இனி "தொக்கா" சிக்க போகும் நபர்கள்.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காப்பு காடுகளுக்கு அருகே விவசாயிகள் மின்வேலிகள் அமைப்பது தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சூரிய சக்தி மின்வேலி உட்பட அனைத்து வகையான மின்வேலிகளையும் அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அததுடன் காப்புக்காட்டில் வனப்பகுதியில் இருந்த 5 கிலோ மீட்டருக்குள் மின்வேலி அமைப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளை பாதுகாக்க எத்தனையோ வழிமுறைகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது. அப்படியிருந்தும், நிறைய விலங்குகள் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிடுகின்றன.
குறிப்பாக, உயர் மின்னழுத்த மின் வேலிகளால் மின் விபத்து ஏற்பட்டு வன விலங்குகள் ஷாக் அடித்து இறந்துவிடுகின்றன.. சமீபத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
கரண்ட் வேலி: கரண்ட் வேலியை விவசாயிகள் கட்டி வைத்திருக்கிறார்கள்.. இது தெரியாமல் ஒரு புலி அந்த பக்கமாக வந்துள்ளது.. ஷாக் அடித்து அங்கேயே இறந்தும்விட்டது.. உடனே அந்த கிராம மக்கள், அந்த புலியை வெட்டி, எல்லாரும் புலிக்கறி சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படி இன்னும் ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான், மின் வேலிகளை அமைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வன விலங்குகளால் விவசாய விளைபொருட்களும் சேதமாகாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது.
அரசாணை விதிமுறைகள்: இதற்காகவே, தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-ஐ அறிவித்து அரசிதழில் 03.07.2023 அன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. வன விலங்குகளின் மின்கசிவைத் தடுக்க தமிழ்நாடு மின்வேலி (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-ஐ சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையை இது மின்வேலிகள் அமைப்பதை தரப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது மற்றும் ஏற்கனவே விவசாய நிலங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்வதை உறுதி செய்வது என்று துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது:

- சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயம்.
- இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்பு காடுகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
- அறிவிக்கை செய்யப்பட்ட காப்பு காட்டின் வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்கனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொண்ட ஒரு கூட்டுக் குழு, 15 நாட்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து, பதிவுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், மின்வேலி அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்து சரிபார்த்த பிறகு, மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் விவரக்குறிப்புகளை சரிபார்த்து உரிய ஆய்விற்கு பிறகு ஒப்புதல், குறைப்பு அல்லது நிராகரித்து, விண்ணப்பத்தின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

- இந்த விதிகள் வெளியிடப்பட்ட தேதியில் ஏற்கனவே மின் வேலிகள் அமைத்துள்ள நில உரிமையாளர், இந்த விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அறுபது நாட்களுக்குள் பதிவு சான்றிதழைப் பெறுவதற்கு, மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அனுமதி கிடைத்தவுடன், சொத்தின் உரிமையாளர் அனுமதி பெற்ற நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் மின் வேலியை அமைத்து, உறுதிமொழியுடன் மின்வேலியை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
- வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை: இதன் மூலம் சோலார் வேலிகளின் தரம் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. அத்துடன், இந்த நடவடிக்கை விபத்து இறப்புகளை குறைக்கும் என்றும் நம்புகிறார்கள்.. இந்த வருடம் மட்டும் 7 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன... 2022ல் எட்டு யானைகளும், 2021ல் ஆறு யானைகளும், 2020ல் 13 யானைகளும் மின்சாரம் தாக்கி இறந்துள்ள நிலையில், தமிழக அரசு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications