10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வில் விலக்கு என அறிவிப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையின் இயக்குனர் சேதுராம வர்மா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‛‛10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அவரவர் தாய்மொழியில் மொழிப்பாட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் மொழி தேர்வில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு வழங்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications