கள்ளச்சாராய காவுகளின் உச்சம்! 2001-ல் பண்ருட்டியில் 53 பேர் பலி; 200 பேர் கண்பார்வை இழந்த துயரம்!
சென்னை: தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33-ஐ எட்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பலியாகினர்; 200க்கும் அதிகமானோர் கண் பார்வையை இழந்த சம்பவம் பெரும் துயரத்துக்குரியதாக இருந்தது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது நடைமுறையில் இல்லை. 1980களில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தனியார் மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது; இதுவும் நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசே டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலம் மதுபானத்தை விற்பனை செய்து வருகிறது.

ஆனாலும் வட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் எனப்படும் விஷ சாராயம் அல்லது மலிவு விலை சாராயம் குடித்து மாண்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் 2001-ல் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். கொத்து கொத்தாக மருத்துவமனைகளில் செத்து மடிந்தவர்கள் ஒருபுறம்.. கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் 200க்கும் அதிகமானோர் கண் பார்வையையே பறிகொடுத்த கொடுமை இன்னொரு பக்கம். அதே 2001-ல் ரெட்ஹில்ஸ் அருகே கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து செத்து மாண்டு போயினர்.
கடந்த 2023-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டில் தற்போது போலவே கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக சுருண்டு விழுந்தனர். 2023-ல் 30க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தால் காவு கொள்ளப்பட்டனர்.
தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 33 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது அச்சம்.
கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக கள்ளச்சாராய வியாபாரிகள் மீது அதி உச்ச நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் பாயவே செய்கின்றன. அரசு இயந்திரம் முழு வீச்சில் இறக்கிவிடப்பட்டு கள்ளச்சாராய வேட்டை நடக்கிறது. ஆனால் கள்ளச்சாராய விற்பனை துளியும் இல்லாத வகையில் 'சாவுகள்' நிகழ்வதற்கு முன்னர்தானே நடவடிக்கை அவசியமானது. கிராமங்களில் இதற்கான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளூர் போலீசாரின் மெத்தனங்களை முடிவுக்குக் கொண்டு வரும் கடும் நடவடிக்கைகள்தான் கள்ளச்சாராய சாவுகளை நிறுத்தும். மாவட்ட அளவிலான அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை, சம்பவம் நிகழ்விடத்து காவலர்கள் மீதும் கடுமையாக்கப்பட்டால்தான் இதர பகுதி காவலர்கள் இனியேனும் கள்ளச்சாராயத்தை கண்டும் காணாமல் இருக்கமாட்டார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications