தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் அரசின் இலவச லேப்டாப்! விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கு கிடைக்கும்?
சென்னை: தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி யாரெல்லாம் இந்த லேப்டாப்களை வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், புத்தகப் பை, சீருடை, சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அது போல் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.

இந்த இலவச லேப்டாப் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிலும் project, assignment உள்ளிட்டவைகளை செய்ய லேப்டாப் அவசியம் என்பதால் இதற்காக குறைந்தபட்சம் 30 ஆயிரத்தை கூட செலவு செய்ய முடியாத பொருளாதார நெருக்கடியில் அரசு கல்லூரி மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
பொருளாதாரத்தால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் அரசு, இலவச லேப்டாப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு கல்லூரியில் படிப்பவர்கள் மட்டும் ஏழைகள் அல்ல, தனியார் கல்லூரிகளிலும் சில ஏழை மாணவர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கும் லேப்டாப் கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் இத்தனை நாட்கள் காத்திருந்தனர்.
அப்படிப்பட்ட மாணவர்களுக்காகவே வந்துள்ளது சூப்பரான வாய்ப்பு! ஆம்! தமிழக அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்தவுள்ளது. இது சும்மா பேச்சு இல்லை, விரைவில் உங்கள் கைகளில் லேப்டாப் கிடைக்க போகிறது.
வழக்கமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த முறை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.
எல்லாருக்கும் லேப்டாப் கிடைக்குமா என்றால், அப்படி கிடையாது. இந்த லேப்டாப் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அரசின் Post Matric Scholarship பெறும் தகுதி படைத்தவர்களாக இருத்தல் வேண்டும். அதாவது கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்குத்தான் இந்த இலவச லேப்டாப் வழங்கப்படும்.
தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் இந்தத் திட்டம் கைகொடுக்கும். பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக லேப்டாப் வாங்க முடியாத மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம்!
எனவே இதுவரை போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனே கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அப்ளை செய்யுங்கள். அத்துடன் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் தேவை. இந்த திட்டத்தில் உங்கள் பெயரை சேர்க்க கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி வையுங்கள். இல்லாவிட்டால் ஒரு அப்ளிகேஷன் கொடுங்கள். அப்போதுதான் அரசு கணக்கெடுக்கும் போது உங்கள் பெயர்களையும் உங்கள் கல்லூரி நிர்வாகம் கொடுக்கும். அப்போதுதான் லேப்டாப் கிடைக்கும்.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications