தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு! லிஸ்ட்டில் யார் யார்?
சென்னை: தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜியாக எஸ்.மல்லிகா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக ராஜீவ் குமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை எஸ்பியாக முத்தமிழ், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐஜியாக அபிஷேக் தீக்ஷித் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிறகு தமிழகம் திரும்பி நிலையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழக அரசில் பல மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக காவல் மற்றும் ஆட்சிப் பணியில் இருக்கும் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராகவு, சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராகவும், தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராகvஉம், தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டனர். இதேபோல், சிறு, குறு தொழில் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநராக இருந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த மாற்றம் நிகழ்ந்து 15 நாட்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பிரிவு டிஜிபி ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஊர்க்காவல் படை டிஜிபியாக பதவி வகித்த வன்னிய பெருமாள், சென்னை ரயில்வே டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக இருந்தால் மல்லிகா, சென்னை மனித உரிமைகள் ஆணைய ஐஜியாகவும், சென்னை ரயில்வே டிஐஜியாக இருந்த அபிஷேக் தீக்ஷித் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பணியிட மாற்றம் பெற்றிருக்கிறார். மேலும், லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்பி முத்தமிழ் செல்வி குற்ற விசாரணை பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications