Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட் நியூஸ் வருது.. உரிமைத் தொகை + நிவாரண தொகை.. டபுளா வருமா பணம்? தமிழக அரசின் நிவாரண நிதி எவ்ளோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பொது நிவாரண நிதி வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக்ஜாம் புயல் தாக்கத்திலிருந்து சென்னை மீளவில்லை.. சென்னை மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது.. இதனால் 4 மாவட்டங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Tamil nadu government Big announcement and Chennai flood relief money soon to TN People

பாதிப்பு: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது... கார், பைக், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், சோபா, கட்டில், மற்றும் மின்சார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்துமே நீரில் மூழ்கி சேதமடைந்தன.

மேலும், பல இடங்களில் தண்ணீர் இன்னும் வடியவேயில்லை.. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.. 5 நாட்களாகியும் பல இடங்களில் கரண்ட் இல்லை.. நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன.. எனவே, மழை நிவாரண நிதியாக, குறைந்தது குடும்பத்துக்கு 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை, அரசு தரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்..

அதிகாரிகள்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழக அரசு ஏற்கனவே கேட்டிருந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தினார்...

புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வருகை தந்திருந்தார்.. தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், புயலால் ஏற்பட்ட தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

வெள்ள நிவாரணம்: இதையடுத்து, சென்னை மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.. மேலும், அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி, நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அநேகமாக பொங்கலுக்கு சிறப்பு பொருட்கள் ரேஷனில் வழங்கும்போது, இந்த நிவாரணத்தை சேர்த்து வழங்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு செய்து தந்திருந்தது.. கொரோனா நிதியும் இவ்வாறுதான் தரப்பட்டது.. அதுபோலவே, தற்போதைய பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் தமிழக அரசு பூர்த்தி செய்யும் என்கிறார்கள்..

நம்பிக்கை: இதுகுறித்து அதிகாரிகளை கேட்டபோது, "மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதால், அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளது. மேலும், அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டி உள்ளது... இவற்றை கருத்தில் வைத்து, மீட்பு பணிகள் முடிந்து, சேத மதிப்பீடு கணக்கிடப்பட்ட பிறகு, நிவாரண நிதி வழங்குவது குறித்து, அரசு ஆலோசிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+