Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.. அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அரசுப் பேருந்து கட்டணம் உயராது என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறிய அவர், நீதிமன்றத்தின் உத்தரவுபடியே பொதுமக்களிடம் பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து கட்டண உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்தது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள்

அதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, தமிழக அரசின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்து 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Tamil Nadu Government Bus Fares to Remain Unchanged Confirms Minister Sivasankar

உயர்நீதிமன்ற உத்தரவு

இதன்பின் போக்குவரத்து துறை ஆணையரகம் தரப்பில், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

கருத்துக்கேட்பு

அதேபோல் பெட்ரோல், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்த்தும் முறையை மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. கருத்து கூற விரும்புவோர், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு வந்தோ அல்லது தபால் மூலமாகவோ கருத்து கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பாதிப்பு

இதனால் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே விரைவுப் பேருந்துகளில் 30 கிமீ ரூ.24 ஆகவும், சொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிமீ ரூ.27 கட்டணமாக உள்ளது. இதற்கு மேல் உயர்ந்தால், அது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். இதனால் நீதிமன்றம், இதுகுறித்து மக்கள் கருத்தை கேட்டு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

என்ன நடக்கும்?

எனவே, தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கின் அடிப்படையில், கருத்துக் கேட்பு கேட்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துகள் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்தால் தான், தனியார் பேருந்து கட்டணம் உயரும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள நடைமுறை. இதில் அரசின் நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+