அரசு செலவில் பட்டப்படிப்பு.. +2 மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! ‘இதை’ செய்தால் மட்டும் போதும்!
சென்னை: ப்ளஸ்- 2 பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றுமுதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி ஆணையகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது," அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 7 (இன்று) முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதள வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் (ரூ.48) செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப் பிரிவுகளில் 1.27 லட்சம் இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்." என கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications