அரசு ஊழியர்களுக்கு பறந்த செய்தி.. "ஓய்வூதிய கூடுதல் தொகை" குறித்து முக்கிய கோரிக்கை.. திடீர்னு என்ன
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துவரும் நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியின்போது, அவர் சொன்ன கருத்துக்கள் அதிருப்தியை தந்திருந்தது.
அமைச்சர் பேசும்போது, "தமிழகத்தில் ஓய்வூதிய திட்டங்களில், 30 லட்சத்து 55,857 பேருக்கு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில், 74,073 பேர் இருக்கிறார்கள்.. அவர்களில் தகுதியானவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தப்படுவதால், வருடத்துக்கு 845.91 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களிலும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்..

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, ஆந்திராவில் சில முடிவுகள் எடுத்துள்ளனர். மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது.. இவற்றை எல்லாம் ஆராய்ந்து, தமிழகத்திற்கு பொருத்தமானதை ஆலோசித்து, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்குதான் அதிருப்தி வெடித்து கிளம்பியது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்க நிர்வாகிகள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு தங்கம் தென்னரசு தந்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூறியிருந்தார்.
ஓய்வூதியம்: இந்நிலையில், ஓய்வூதியமாக கூடுதல் தொகை வழங்கப்பட்டதை பிடித்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2009ல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டது. அதில் சிலருக்கு கூடுதலாக ஓய்வூதியமும் வழங்கப்பட்டதாக தணிக்கை துறை ஆய்வில் தெரிய வந்தது.. அந்த கூடுதல் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கருவூல கணக்கு துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன், துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "கூடுதலாக வழங்கப்பட்ட இனங்கள், சரியான ஓய்வூதியத்திற்கு குறைக்கப்பட வேண்டும். இதை ஓய்வூதியருக்கு கடிதம் வழியாக தெரியப்படுத்த வேண்டும். பிறகு, மாத ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்.
நடவடிக்கைகள்: இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், தவறான ஓய்வூதியம் நிர்ணயம் செய்த விபரத்தை, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காமல், அரசுக்கு இழப்பு ஏற்படுமானால், கருவூல அலுவலர்கள், ஊழியர்களே பொறுப்பு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
என்றைக்கோ நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு, இப்போது இந்த சுற்றறிக்கை அனுப்பி, பிடித்தமும் செய்ய சொல்லி வெளியிடப்பட்டிருக்கும் இந்த சுற்றறிக்கையானது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடம், மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கருத்துக்கள்: இதுகுறித்து, மாநகராட்சிகள் அமைச்சு பணியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், ''ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டால், அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட, 2 வருடங்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால், பல வருடங்களுக்கு பிறகு, இப்போது நடவடிக்கை எடுப்பது தவறானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications