விடாமல் சிக்ஸ் அடிக்கிறாங்களே.. அரசு ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து குட்நியூஸ் சொன்ன ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த 30 நாட்களில் மட்டும் ஏகப்பட்ட முக்கியமான அசத்தலான அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்ளின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.

1. நேற்று வெளியான அறிவிப்பில்.. தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.

2. அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu Government gave massive good news to government employees

3 டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வான இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் 50,000 விவசாய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

4. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்

5. அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

6. கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

7. திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக வழங்கப்படும்

8. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு

9. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

10.. முன்பு இருந்த விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்று சட்டப் சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+