திருவண்ணாமலை ரேஞ்சே மாறுது.. இன்னும் ஒரே வருசம் தான்! “மினி டைடல் பூங்கா” டெண்டர் கோரியது தமிழக அரசு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஓராண்டில் இதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மேம்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைட்டில் பார்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாட்டுத்தாவணியில் மிகப்பெரிய அளவில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதேபோல, திருச்சியிலும் பிரமாண்டமாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்து இருந்தார். 34 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கியது. கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க, கட்டுமான பணிகளுக்காக டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. ரூ.34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மினி டைடல் பார்க் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications