50000 ரூபாய் பெற அழைக்கும் தமிழக அரசு.. பெண் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்களே விண்ணப்பிப்பது எப்படி?
திருவண்ணாமலை: பெண் குழந்தை வைத்துள்ளவர்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உரிய சான்றிதழ்கள் அளித்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுள்ளார்.
தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகள், 12ம் வகுப்பு முடித்த பின் உயர் கல்விக்கு போகும் போது, அவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் காலங்களில் மாதம் 1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிருக்கு மாதம் 1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் எளிய முறையில் கடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உதவி வருகிறது.

அதேபோன்ற ஒரு திட்டம் தான் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இந்த திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்குகிறது தமிழக அரசு. . இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ளலாம். 18 வயது நிறைவு பெற்ற பின்னர், பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு இந்த தொகை நிச்சயம் உதவும்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இந்ததிட்டத்தில் சேர விரும்பும் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992ம் ஆண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, சமுதாயத்தில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் உணர்வோடும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திட வேண்டும் என்பது தான். இதனிடையே கல்வியில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் வகையில் 2001ம் ஆண்டு மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் சிறு குடும்ப முறையினை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் படி ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பிறப்பு சான்று, பெற்றோரின் வயது சான்று, பிறப்பு சான்று அரசு மருத்துவரின் சான்று , குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை), வருமான சான்று ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிட சான்று போன்றவற்றை பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2வது பெண் குழந்தையின் 3 வயதுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்" இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியிருந்தார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பம் செய்வது எப்படி பொதுவாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு 2-வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
50000 உதவி தொகை: ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான டெபாசிட் பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. முதலில் பெண் குழந்தை பிறந்து 2-வது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவு பெற்ற பின்னர் டெபாசிட் செய்த பத்திரங்களுடன் சென்று உடன் முதிர்வு தொகையை அந்த குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications