Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிறப்பு" கனமழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது.. பாராட்டும் பிரேமலதா விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலே சென்னையில் வெள்ளம் வருவது வாடிக்கையாக இருந்தது. நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் கனமழையால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தாலும், தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மழைநீர் தேங்கவில்லை

மழைநீர் தேங்கவில்லை

வடசென்னை, முகலிவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கினாலும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விரைந்து அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையின் நகர்ப் பகுதிகளில் மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு எங்கும் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

இந்த நிலையில் மழை பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.

தமிழக அரசுக்கு பாராட்டு

தமிழக அரசுக்கு பாராட்டு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், சென்னையில் கடுமையான வெள்ளத்தை பார்த்துள்ளோம். தற்போது இரவு நேரத்தில் மழை வந்தாலும், பகல் நேரத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. எங்காவது மழைநீர் தேங்கியுள்ளதாக புகார் அளித்தாலும், உடனடியாக ராட்சத இயந்திரங்கள் வைத்து தண்ணீரை அகற்றிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு மழை பெய்தும், எந்தப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபடவில்லை. இந்த மழை முடிவடைந்த பின்னர், மழைநீர் வடிகால் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தொண்டர்களுக்கு வேண்டுகோள்

தேமுதிக தொண்டர்களுக்கு வேண்டுகோள்

அதற்கு தேமுதிக சார்பாக பாராட்டுக்கள். அதேபோல் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. விவசாய நிலங்களும், மக்களும் அங்கு அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+