"ரோப் கார்".. இது மட்டும் வந்தா கூட்டம் அள்ளும்.. 5 மலைக்கோவில்களுக்கு செம வசதி.. சேகர்பாபு திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் 5 மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பழனி முருகன் கோவிலும் ஒன்று. வருடா வருடம் இந்த கோவிலுக்கு பல கோடி பேர் சென்று வழிபாடு நடத்துவது உண்டு. பழனி மலை, இடும்பன் மலை ஆகிய கோவில்களை பார்க்க பலர் வருவது உண்டு.
இந்த கோவிலில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ரோப் கார் வசதியும், வின்ச் டிரைன் வசதியும் கூட இங்கு பக்தர்கள் அதிக வர ஒரு வகையில் காரணம். மக்களை அதிகம் ஈர்க்கும் விஷயமாக இந்த ரோப் கார் வசதி உள்ளது.

ரோப் கார் வசதி
அஸ்திவாரத்தில் இருந்து நேராக கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிப்பதற்காகவே மக்கள் பலர் இங்கு வருவது உண்டு. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இது தொடர்பான திட்டத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

உறுதி
ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட போகும் 5 கோவில்களில் திருச்சி மலைக்கோட்டை கோவில் ஒன்று என்பது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இது போக பழமுதிர்சோலை உள்ளிட்ட சில மலை கோவில்களிலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஏன்
மக்களை அதிகம் ஈர்க்கும் வகையிலும், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும் ரோப் கார் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் வருமானத்தை பெருக்கும். கொரோனாவிற்கு பின் பல்வேறு துறைகள் மூலம் வருமானத்தை பெருக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதில் சுற்றுலாத்துறையும் ஒன்று.

டாஸ்மாக்
டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்காமல், சுற்றுலாத்துறை போன்ற மற்ற துறைகளில் வருமானத்தை பெருக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பல சுற்றுலா களஞ்சியங்கள் உள்ளன. இப்படி சுற்றுலாத்தலங்களை புதுப்பிப்பது, புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசு வருமானம் ஈட்டும் முடிவில் உள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications