தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி.. நவம்பர் 4 ரெடியா இருங்க.. .. சுற்றி சுழலும் ஆபீசர்ஸ்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழகமெங்கும் மாவட்ட கலெக்டர்கள, "ஹெல்த் வாக்" எனப்படும் சாலையின் துரித பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அந்தவகையில், "நடப்போம் நலம்பெறுவோம்" என்ற இந்த திட்டமானது, பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
சமீபத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு "ஹெல்த் வாக்" என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று அவர்களிடம் கேட்டோம்.
அதற்கு அவர்கள், மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். அந்த சாலைகள் 8 கி.மீ தூரத்திற்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.

ஆரோக்கியம்: இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, 8 கி.மீ என்பது 10 ஆயிரம் அடிகள் ஆகும். ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், 8 கி.மீ தூரத்திற்கு அமைத்துள்ளதாக அவர்கள் காரணம் கூறினார்கள். இதற்கு பிறகு, நாங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியதும், இந்த அருமையான திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். உடனே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் திட்டம்: இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கின்றார்.. அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடைபயிற்சியும் மேற்கொள்ளவுள்ளார்" என்று கூறியிருந்தார் அமைச்சர் சுப்பிரமணியன். இந்த திட்டப்பணிகள்தான் தற்போது தமிழகமெங்கும் வேகம் எடுத்துள்ளன..
சென்னையில் முதல்வர் இந்த திட்டத்தை துவக்கி வைக்கும், அதே தினத்தில் 38 மாவட்டங்களிலும் திட்டம் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் தூர இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே உதயா நகர், தாமிரபதி காலனி, ஜெபா கார்டன் உள்ளிட்ட பகுதி சாலைகளில் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மறுபடியும் திரும்ப 4 கிலோமீட்டர் தூரம் நடந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேரும் வகையில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்திற்கான சுகாதார நடைபயிற்சி சாலை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோலவே, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கடலூரிலும், இந்த நடைபாதை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.. கடலூர் பாரதி சாலையில் இருந்து சில்வர் பீச் வரை உள்ள விஸ்தாரமான சாலை நடைபாதைக்கு ஏற்ற இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், திட்டப்பணிகள் துரிதமாக நடக்கின்றன.
பதாகைகள்: அதன்படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும், இந்த திட்டத்துக்காகவே, சாலையில் குடிநீர் வசதி அமைத்தல், இளைப் பாற இருக்கைகள், மரங்கள் நடுதல், காண்போர் மனம் கவரும் வகையில் வண்ண பூ செடிகள் நடுதல், மைல் கல் நடுதல், நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு பதாகைகள், அழகான மின் விளக்குகள் போடுதல், சிறிய அளவிலான ஆடிட்டோரியம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் செய்யபோகிறார்களாம்.
அதுமட்டுமல்ல, நடப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் தயாராகி வருகின்றன. எனவே, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் சுகாதாரப் பணிகளை அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து, ஆய்வு செய்து வருகிறார்கள்..
நடைபயிற்சி: இந்த துவக்க விழாவின்போதும், நடை பயிற்சி பாதையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக செய்ய போகிறார்களாம்.
உடல் பருமன், நடைபயிற்சி இன்மையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்பு போன்றவைகளை தவிர்க்க இந்த திட்டம் பெரிதும் உதவும் என்றும் நம்பப்படுகிறது.. காரணம், 8 கிலோ மீட்டர் தூரம் என்பது சராசரியாக பத்தாயிரம் அடி தூரம் நடப்பதாகும்..
இரட்டிப்பு மகிழ்ச்சி: இந்த குறிப்பிட்ட சுகாதார நடை பயிற்சி சாலையில் மட்டுமின்றி பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள இடங்களிலும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த திட்டம் வலியுறுத்துவது, இதன் கூடுதல் சிறப்பாகும். அந்தவகையில், தமிழக மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்க இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த போவது, இரட்டிப்பு மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு பெற்றுத்தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications