கேப்பே விடலையே! ஸ்டாலினின் 4 சிக்ஸர்! வீடு தேடி வரும் "ஆயிரங்கள்".. தமிழக மக்களுக்கு இனி பணமழை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முக்கியமான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மக்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக முக்கியமான சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த அறிவிப்புகள் பற்றி பார்க்கலாம் .
அறிவிப்பு 1 : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 2: தமிழ் புதல்வன்" திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாற்றப்பட்ட திட்டம்: கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.
அறிவிப்பு 3: அதேபோல் காலை உணவு திட்டமும் விரிவாக்கப்பட்ட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் பயிலும் 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுக்க கவனம் பெற்ற இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் மதிய உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தொண்டு நிறுவனங்களின் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் உடைய குழந்தைகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவும், அவர்களுக்கான தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 4: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இருந்தாலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் மட்டும் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இருப்பதால் திட்டத்தை விரிவாக்க முடியாது. ஆனால் விண்ணப்பம் பெறப்பட்டு பயனாளிகள் தேர்தல் முடிந்த பின் சேர்க்கப்படுவார்கள். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த வாரம் இதற்கான அப்ளிகேஷன் வழங்கப்பட உள்ளது.
இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளத்தாக தகவல் வெளியாகி உள்ளது.
'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications