குட்நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் அப்பவே சொன்னாரே..தமிழ்நாடு காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு
சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக துவக்கியுள்ளார். நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் A.T.S. எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக களமிறங்கி உள்ளன.. அப்படியிருந்தும்கூட, ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.

கோவை சிலிண்டர் வெடிப்பு: கடந்த வருடம்கூட, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியெடுத்துவிட்டது.. இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன், என்ஐஏ அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் இறங்கி, நிறைய பேரை கைது செய்திருந்தார்கள்.
அதேபோல, ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்..
தடுப்பு நடவடிக்கை: பிறகு, தீவிரவாத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக காவல்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும், தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பும் வெளியிட்டிருந்தார்.
முதல்வரின் இந்த உத்தரவையடுத்து, அதற்கான பணிகளை உள்துறையும் மேற்கொண்டு வந்தது. கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பிரிவு உள்ள நிலையில், காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு நேரடியாகவே சென்று, அந்த பிரிவுகள் செயல்படும் விதம் குறித்தெல்லாம் ஆய்வு செய்தனர். இறுதியில், பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.
அரசாணை: இந்நிலையில், தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, தீவிரவாத தடுப்பு பிரிவு ஸ்பெஷலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என்று அறிவித்துள்ளது. 1 டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இப்பிரிவில் செயல்படுவார்கள்
4 மாவட்டங்கள்: காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக தேர்வு செய்ய உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருக்கிறார்... முதற்கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல் கட்டமாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த பிரிவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது..
தீவிரவாத தடுப்பு பிரிவுக்காகவே, 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்காக அமைச்சக பணியாளர்கள் 36 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு புதிதாக 89 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
பெருத்த நம்பிக்கை: தமிழகத்தில் ஏதாவது பயங்கரவாத செயல்கள் நடந்தால், மத்திய அரசின் என்ஐஏ, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள்தான் இங்கு வந்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக தமிழகத்திலேயே, காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவினை முதல்வர் ஏற்படுத்தியிருப்பது, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. தமிழகத்தில் பயங்கரவாதமே இனி தலைதூக்காதவாறு, காவல்துறை வேரோடு அழித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications