நீங்க நாகை மாவட்டத்தினரா?தமிழக அரசின் ரூ 4 லட்சம் மானியம் உங்களுக்குத்தான்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பெண்களுக்கு ரூ 4 லட்சம் மானியம் கொடுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் ஆதிதிராவிடர் பிரிவினராக இருந்தால் அவருக்கு மானியம் ரூ 6 லட்சத்தை பெறலாம்.
தமிழகத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு விவசாயிகள் அல்லது உவர்நீர் இறால் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், மீன், இறால் உற்பத்தியை பெருக்கவும் அரசு பல்வறு திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.

அதன்படி பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY)கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்களை அமைக்க ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு ரூ 11லட்சம் செலவாகும். இதில் உள்ளீட்டு மானியத்தையும் அரசு வழங்குகிறது.
ரூ 11 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ 4.40 லட்சமும், ஆதிதிராவிடர் அல்லது பெண்களுக்கு 60 சதவீத மானியமாக ரூ 6.60 லட்சமும் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கடல் சார்ந்த நாகை மாவட்டத்திற்கு பொது பிரிவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) கீழ் உயிர் கூழ்ம திரள் குளங்களில் உவர் நீர் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 1 யூனிட் அமைக்க மொத்தம் ஆகும் செலவான ரூ 18 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ 7.20 லட்சமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ 10.80 லட்சமும் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் மீன் அல்லது இறால் வளர்ப்பு விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நாகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் கீழ் 2025.26 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் வேளாண்மை/தோட்டக்கலை/வேளாண் வணிகம் / வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த நபர்கள் மானியத்தில் அமைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை பெற https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
என்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பப் படிவம் (Fisheries Dept. அலுவலகத்தில் கிடைக்கும்)
நிலம் தொடர்பான ஆவணம் / வாடகை ஒப்பந்தம்
ஆதார், வங்கிக் கணக்கு விவரம், சமூகச் சான்று (SC/ST/Women)
திட்ட அறிக்கை (Project proposal)












Click it and Unblock the Notifications