தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு.. ஓய்வூதியதாரர்களே இன்றே "இதற்கு" கடைசி.. உடனே முடிங்க
சென்னை: ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வரும்நிலையில், அதுகுறித்த ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வருடத்துக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

புதுப்பிக்கலாம்: இந்த உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அருகிலுள்ள இ-சேவை மையம், வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் புதுப்பிக்கலாம்...
ஒருவேளை, ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையானால், உயிர்வாழ் சான்றிதழை மேலும் புதுப்பிக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும்... ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் மரணம் அடைந்தால் அத்தகைய ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர் இறப்பு சான்றிதழின் நகலை இந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.. இதெல்லாம் இந்த திட்டத்தின் அடிப்படை விதிமுறைகளாகும்.
வாழ்நாள் சான்றிதழ்: அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுநாள்வரை நேரில் சென்றுதான், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து வரவேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆனால், கொரோனாவின் ஆபத்து காலத்தில், வயது முதிர்ந்தவர்கள் அலைய வேண்டியதை தவிர்க்கும் வகையிலும், வாழ்க்கை சான்றிதழ் பெறுவதற்காக அரசு ஆன்லைன் வாயிலாகவும், வீடியோ கால் வாயிலாகவும் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளை அறிவித்தது.
கைரேகை: இதனால், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
ஓய்வூதியதாரர்கள்: இந்நிலையில், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க, நவம்பர் 30ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று நடப்பாண்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில், இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைகிறது.. ஜீவன் பிரமான் பத்திரம் சமர்ப்பிக்காத பட்சத்தில் ஓய்வூதியதாரர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பதால், ஓய்வூதியதாரர்கள் விரைந்து இன்றே, இந்த பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications