தமிழ்நாட்டில் உருவாகும் புதிய மாவட்டம்? ரெடியாகும் பணிகள்! நிறைவேற்றப்படும் முக்கிய வாக்குறுதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கும்பகோணம் மாவட்டம் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்கக் கோரி, வணிக அமைப்புகள் மற்றும் போராட்டக் குழுவினர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தங்கள் நிபந்தனையற்ற ஆதரவுக்கு எந்தவொரு பிரதிபலனையும் அளிக்காததே இதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kumbakonam

இந்த அழுத்தங்கள் காரணமாக ஆளும் திமுக கும்பகோணம் மாவட்டம் உருவாக்குவது தொடர்பான திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கும்பகோணம் மாவட்டம்

கும்பகோணத்தை தஞ்சாவூரில் இருந்து தனி வருவாய் மாவட்டமாகப் பிரிப்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். விவசாயப் பகுதியான டெல்டாவில், கோயில் நகரமான கும்பகோணம் ஒரு வணிக மையமாகவும் திகழ்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல புதிய மாவட்டங்கள் உருவாகின. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே போல புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்து உள்ளன. இந்த கும்பகோணத்தை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனி மாவட்டம் வேண்டும், நாங்கள் மிகப்பெரிய நகரம். மற்ற பல மாவட்டங்களை விட நல்ல வருவாய் ஈட்டுகிறோம்.

கடந்த ஆண்டு கூட கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசு செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் கும்பகோணம்

மற்ற மாவட்டங்களை விட அதிக வருமானம் ஈட்டி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு மட்டும் மாவட்ட அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது ஏன் என்று கும்பகோணம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு கும்பகோணம் மக்கள் பொதுவாக ஆட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தஞ்சாவூர் செல்ல வேண்டி உள்ளது.

இதற்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ஆகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கும்பகோணத்தை உடனே மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கும்பகோணம் மாவட்டம் கோரிக்கை

2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி கும்பகோணம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கும்பகோணம் மாவட்டப் போராட்டக் குழுவுடன் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.

கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் வருவாய் கோட்டங்களை உள்ளடக்கி இந்த புதிய மாவட்டம் அமையவிருந்தது. இது தொடர்பாக பல முறை கும்பகோணத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், தனி வருவாய் மாவட்டமாக உருவாவதற்கான அனைத்து தகுதிகளும் கும்பகோணத்திற்கு உள்ளதாகவும் அந்த அமைப்புகள் கூறி வருகின்றன.

கும்பகோணம் சோழர் காலத்தில் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அரசு செய்ய வேண்டியது ஒரு அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்குவது மட்டுமே. இது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+