தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? பஸ் ஏறும் முன் இதை படிச்சிடுங்க.. இரவோடு இரவாக வந்த உத்தரவு!
சென்னை: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்களின் பாதுகாப்பை கருதி இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
பேருந்து நிலையங்கள்: ஆனால் பேருந்துகள் பெரும்பாலும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படவில்லை.
சென்னை; தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
உதவி எண்கள்; தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்களின் பாதுகாப்பை கருதி இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்-(149) செயல்பாட்டில் உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் "1800 599 1500" என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், வருகின்ற "10.11.2023" முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149)
அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர். மக்களின் பாதுகாப்பை கருதி இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தீபாவளிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை. இந்த நிலையில்தான் இந்த சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications