கைவிரித்த மத்திய அரசு.. தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்யப்பட்ட சம்பளம்.. தமிழக அரசு துணிச்சல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

dearness allowance

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (சமக்கிரஹா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடப்பு கல்வியாண்டிலும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும் கூட.. தமிழ்நாடு முழுக்க 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

போனஸ் அறிவிப்பு: தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று அல்லது நாளை போனஸ் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தீபாவளிக்கு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட எல்லோருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

இந்த முறை தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு + தீபாவளி போனஸ் என்று இரட்டை போனஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வாரமே தமிழ்நாட்டில் விரைவில் தீபாவளி போனஸ் அறிவிப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள். பொதுவாக 20% என்பது அது அதிகபட்ச போனஸ்தான். எனவே.. பெரும்பாலும் போனஸ் 12- 14 சதவிகிதம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் 1 வார வருமானம் போனஸாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.

இதற்கான ஆலோசனைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்ந்தது.

இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+