பள்ளி மாணவர்களுக்கு கலக்கல் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க.. டைம் நெருங்கிடுச்சே.. தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை, சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு சார்பில் முன்னோடி திட்டங்களில் ஒன்றுதான் "மாநில மதிப்பீட்டு புலம்" ஆகும்.

பரிசுகள்: பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவித்து அதை வெளிக்கொணருவது, அவர்களுக்கான வினா விடை நிகழ்ச்சிகளை நடத்தி, பரிசுகளை தந்து ஊக்குவிப்பது உட்பட பல்வேறு நலன்களை மையப்படுத்தி அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
4 மாதங்களுக்கு முன்புகூட, இதுபோன்ற வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.. அதன்படி கோயம்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள உயர் தொழிநுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கணினி வழி வினாடி வினா போட்டிகள் ஆரம்பமாகின..
பெரம்பலூர்: பிறகு, தருமபுரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 9தேதி முதல் 6 ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வினாடி வினா நடந்து முடிந்தது.. இந்நிலையில், இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
"உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை கைகோர்த்து செயல்படுத்த உள்ளது.
அனைத்து மாவட்டங்கள்: அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 10.07.2023 முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும். இதையொட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வக ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு இணைய வழி பயிற்சி வழங்க வேண்டும்.
இதனை 07.07.2023 மாலைக்கு நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உறுதி செய்ய வேண்டும். இந்த பயிற்சியானது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே நடத்த வேண்டும். ஒருவேளை உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டால், வினாத்தாள்கள் தயாரிக்கும் போது சிக்கல்கள் வந்தால் அதற்கு தீர்வு கான 14417 என்ற இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம்.
ஆசிரியர்கள்: இதுபற்றி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேற்கண்ட வகையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும். இந்த ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த புலமை பெற்றிருப்பதை உறுதி செய்வது அவசியம்.

இதுபோன்ற வினாடி வினா அல்லது வளரறி மதிப்பீடுகள் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக நடைபெறும். இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். வினாடி வினா போட்டிகளுக்கான தேதிகளை பொறுத்தவரை, 6ம் வகுப்பிற்கு ஜூலை 10, 7ம் வகுப்பிற்கு ஜூலை 11, 8ம் வகுப்பிற்கு ஜூலை 12, 9ஆம் வகுப்பிற்கு ஜூலை 13 ஆகிய நாட்களில் நடத்தப்படும்.
ஆப்சென்ட்: ஆப்சென்ட் ஆனால் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 14ம் தேதி வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும். இதையடுத்து 10ம் வகுப்பிற்கு ஜூலை 17, 11ம் வகுப்பிற்கு ஜூலை 18 மற்றும் 19, 12ஆம் வகுப்பிற்கு ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications