ஓயாத சர்ச்சை.. இழுபறியாகும் இர்பான் விவகாரம்.. மத்திய அரசை நாடிய தமிழக அரசு! ஓ.. இது தான் மேட்டரா?
சென்னை: தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய இர்பான் அந்த வீடியோவை நீக்கியதோடு மன்னிப்பு கேட்ட நிலையில் அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
சுகாதாரத்துறை: இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது.
கடும் நடவடிக்கை: கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது 'இர்பான்ஸ் வியூ' யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.
மன்னிப்பு கேட்ட இர்பான்: இந்த நிலையில் இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அத மருத்துவ குழுவிடம் வாட்ஸ்ஆப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியானது.
கொந்தளிப்பு: 'குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு தெரியாமல் தவறு செய்து விட்டேன்.. என்னை மன்னிக்க வேண்டும்.. எனது சேனலில் இருந்து குறிப்பிட்ட அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிடுகிறேன்" என்று இர்பான் தெரிவித்த நிலையில் அந்த வீடியோ நீர்க்கப்பட்டதாகவும் இது குறித்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு: மிகப்பெரிய குற்றத்தை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியா? சாதாரண நபர்கள் செய்திருந்தால் அதிகாரிகள் இப்படி விட்டுவிடுவார்களா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தது. மேலும் இர்பான் மீதும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு: தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இந்தியாவில் இருப்பான் அறிந்திருந்தாலோ அல்லது அதனை மருத்துவர் சொல்லியிருந்தாலோ அது இந்திய சட்டப்படி குற்றம். ஆனால் இந்த விவகாரம் இந்தியாவிற்கு வெளியே துபாயில் நடந்திருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதற்கு துபாய் சட்டத்தில் இடம் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் வெளியில் நடந்திருப்பதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்.
வழிகாட்டு நெறிமுறைகள்: இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து யாராவது குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது என மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications