செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு!
சென்னை: தமிழக அரசியலில் நீண்ட காலமாகப் புயலைக் கிளப்பி வரும் வேலைக்கு பணம் பெற்ற முறைகேடு விவகாரம், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு தற்போது ஆளுநரின் முறைப்படியான ஒப்புதலைக் கோரியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை (ED) தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பிய சூழலில், இந்த நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?
கடந்த 2011-2015 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடி கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.
கடந்த 2023-ல் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் பிறகு அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின. அதன் பிறகு வழக்கு நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர, ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் அனுமதியை தமிழக அரசு கோரியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில் ஃபைல், லோக் பவனுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநர் அனுமதி ஏன் முக்கியம்?
ஒரு மக்கள் பிரதிநிதி அல்லது அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு அந்த மாநில ஆளுநரின் முன் அனுமதி பெறுவது சட்டப்படி அவசியம்.
நீண்ட நாட்களாக இந்த அனுமதி கோரப்படும் விவகாரத்தில், முந்தைய திமுக அரசு, அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. தற்போது, சட்டரீதியான நடைமுறைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழக அரசு ஆளுநருக்கு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
அமலாக்கத்துறையின் அழுத்தம்
சமீபத்தில் அமலாக்கத்துறை தமிழக அரசிடம் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு விரைந்து அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், சட்டத்தின் கடமையைச் சரியாகச் செய்யவும், தமிழக அரசு இந்த ஒப்புதல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இந்த கோப்பிற்குத் தமது ஒப்புதலை அளிக்கும் பட்சத்தில், தமிழக அரசு இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை விரைவில் வெளியிடும்.
கடந்த ஆட்சியில்
செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மே மாதமே அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒருமுறை கோரிக்கை விடுத்திருந்தது.ஆளுநர் மாளிகை அந்த கோப்பை முந்தைய திமுக அரசிற்கு அனுப்பிய போதும், அந்த கடிதம் நேரடியாகத் தங்களுக்கு அனுப்பப்படவில்லை எனக் கூறி அக்டோபரில் திருப்பி அனுப்பப்பட்டது.
செந்தில் பாலாஜி முந்தைய திமுக அரசில் அமைச்சராக இருந்ததால் தான் இந்த விசாரணைக்கான அனுமதி வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் புதிய தவெக அரசு, செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு கிரீன் சிக்னல் கொடுத்து ஃபைல்களை ஆளுநர் மாளிகைக்கு பாஸ் செய்துள்லது.
அரசியல் அரங்கில் என்ன நடக்கும்?
தமிழக அரசின் இந்த 'அனுமதி கோரும்' கோப்பு ஆளுநரின் மேஜைக்குச் சென்றுள்ளது. ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பாரா அல்லது கூடுதல் விளக்கங்களைக் கேட்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.
அனுமதி கிடைக்கும் பட்சத்தில், செந்தில் பாலாஜி மீதான நீதிமன்ற விசாரணை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி, தீவிரமடையும். இது திமுக தரப்பில் பெரும் விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications