சத்தமின்றி உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு.. தமிழ்நாட்டிலேயே முதல்முறை.. பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்
சென்னை: இலவசப் பள்ளி புத்தகத் திட்டத்தைப் போன்று தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளி மாணவி, மாணவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கவுள்ளது. விளையாட்டு பொருட்களுக்கான கிட் மொத்தமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கேலோ இந்தியாவின் பாராட்டு விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்' திட்டம் பிப்ரவரி 7, 2024 அன்று திருச்சியில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் அனைத்து 12,000 கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு கருவிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தொடர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டால் சென்னையில் நடைபெற்றது. இதில் தண்டு 97 பதக்கங்களை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.
தமிழ்நாடு தற்போது விளையாட்டு துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் விளையாட்டு தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு வேகமான முன்னேற்றத்தை பெற்றுள்ளது.தொடர்ச்சியாக தேசிய, சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் நடக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் கெலோ இந்தியா போட்டியும் நடைபெற்றது.
விருது: சமீபத்தில்தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் வாய்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதற்காக "தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ELITE)" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் டி.குகேஷ் ஆகிய செஸ் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டி பயிற்சிக்கான செலவினத் தொகை தலா ரூ.15,00,000/-க்கான காசோலையினை வழங்கினார்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி.ஆர்.வைஷாலி அவர்களுக்கு சர்வதேச போட்டிப் பயிற்சிக்கான செலவினத் தொகை ரூ.15,00,000/-க்கான காசோலை. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். திருலோகச்சந்திரன், வருகின்ற 03.04.2024 அன்று உலகிலேயே உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திட தேவையான நிதி உதவித் தொகை ரூ.5,00,000/-க்கான காசோலை மற்றும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள தி.ஆ.பிரியதர்ஷினிக்கு நுழைவுக் கட்டணம், இரயில் கட்டணம். மற்றும் சீருடைச் செலவினம் ஆகியவற்றுக்கான தொகை ரூ.55,000/-க்கான காசோலையினையும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரரான . ரா.ராஜேஷ்க்கு ரூ.12,00,000/- செலவினத்தில் செயற்கைக் கால்கள் அமைச்சர் உதயநிதி மூலம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
புதிய திட்டம்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளி மாணவி, மாணவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கவுள்ளது. விளையாட்டு பொருட்களுக்கான கிட் மொத்தமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications